Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

இளவரசர் வில்லியமுடைய இன்னொரு முகம்: இளவரசி டயானாவின் கடிதத்திலிருந்து தெரியவந்த உண்மை

0 1

இளவசர் வில்லியமும் ஹரியும் ஆளுக்கொரு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டு நிற்கும் புகைப்படங்கள்தான் இப்போது அதிகம் வெளிவருகின்றன.

ஆனால், அவர்கள் எப்போதுமே இப்படி முட்டிக்கொண்டிருந்ததில்லை என்பதற்கு ஆதாரமாக கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.

இளவரசி டயானாவின் பெற்றோர் வீட்டில் உதவியாளராக பணிபுரிந்தவர் வயலட் (Violet “Collie” Collison) என்னும் பெண்மணி.

வயலட்டுக்கு இளவரசி டயானா பல கடிதங்கள் எழுதியுள்ளார். அவற்றில் சில தற்போது ஏலம் விடப்பட உள்ளன.

அந்தக் கடிதங்களில் ஒன்றில், இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரியின் சிறு வயது குறித்த சில விடயங்களை எழுதியுள்ளார் டயானா.

1984ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி டயானா வயலட்டுக்கு எழுதிய கடிதத்தில், வில்லியம் தன் தம்பி ஹரி மீது அவ்வளவு அன்பு வைத்திருக்கிறார். எப்போது பார்த்தாலும், தம்பியைக் கட்டிப்பிடித்துக்கொள்வதும் முத்தமிடுவதுமாக தன் நேரம் முழுவதையுமே ஹரியுடன்தான் செலவிடுகிறார் வில்லியம் என்று குறிப்பிட்டுள்ளார் டயானா.

ஆக, சிறு வயதில் அண்ணனும் தம்பியும் எவ்வளவு பாசமாக இருந்துள்ளார்கள் என்பது இந்தக் கடிதத்திலிருந்து தெரியவருகிறது.

அது மட்டுமல்ல, ஹரி, மேகனை திருமணம் செய்வதற்கு முன்பு கூட, இளவரசர் வில்லியம், இளவரசி கேட், இளவரசர் ஹரி ஆகிய மூவரும் எங்கேயென்றாலும் சேர்ந்தேதான் சுற்றுவார்கள்.

ராஜ குடும்பத்தின் மும்மூர்த்திகள் என்றே ஊடகங்கள் அவர்களைக் குறிப்பிட்ட காலகட்டத்தை நிச்சயம் மறக்கமுடியாது!

Leave A Reply

Your email address will not be published.