D
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி நடைபெற உள்ளது.
தேர்தல் குறித்த செய்திகளுடன், வேட்பாளர்களைக் குறித்த மோசமான செய்திகளை வெளியிடும் கீழ்த்தரமான பிரச்சாரங்களும் சூடு பிடிக்கத் துவங்கிவிட்டன.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹரிஸ் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க உள்ளது அனைவரும் அறிந்ததே.
அவர் இந்திய மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியினர் என்பது இப்போது பலருக்கும் தெரிந்திருக்கும்.
ஆனால், அவரது கடந்த காலம் குறித்த செய்திகளை எல்லாம் வெளியிட்டு அவரை அவமதிப்பது என கமலாவுக்கு எதிராக களமிறங்கவிருக்கும் ட்ரம்பின் ஆதரவாளர்கள் முடிவு செய்துவிட்டது போல் தெரிகிறது.
ஆக, ட்ரம்ப் கமலாவை ஏற்கனவே மோசமாக விமர்சித்துள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் இப்போது கமலாவின் கடந்த கால காதல்கள் குறித்த செய்திகளை வெளியிட்டு அவரை மோசமாக விமர்சித்துவருகிறார்கள்.
கமலாவும், Montel Williams என்பவரும் சில காலம் காதலித்துவந்தனர். அது குறித்தும், கலிபோர்னியா அரசியல்வாதியான Willie Brown என்பவருடன் கமலா தவறான உறவு வைத்திருந்ததாகவும் ட்ரம்ப் ஆதரவாளர்கள் செய்திகளைப் பரப்பி வருகிறார்கள்.
இந்நிலையில், ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்காக, கமலா ஹரிஸ் ஆதரவாளரான Ana Navarro என்னும் பெண், ட்ரம்பின் மூன்றாவது மனைவியான மெலானியா ட்ரம்ப் ஆடையில்லாமல் பத்திரிகை ஒன்றிற்கு போஸ் கொடுத்த புகைப்படத்தை சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ளார்.
மெலானியா முன்னாள் மொடல் என்பதை சிலர் அறிந்திருக்கக்கூடும்.
கமலா ஹரிஸின் கடந்த காலத்தை இழுப்பவர்கள், தங்கள் கடந்த காலத்தை மறந்துவிடக்கூடாது என்னும் தோரணையில், மெலானியாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் Ana Navarro.
அத்துடன், ஏராளம் சிறுமிகளையும், இளம்பெண்களையும் சீரழித்த அமெரிக்க கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் மெலானியாவும் ட்ரம்பும் நிற்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் Ana Navarro.
பிள்ளைகளை சீரழித்த இப்படிப்பட்ட மோசமானவர்களுடன் பழகியவரா கமலா ஹரிஸ் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் Ana Navarro.
ஆக மொத்தத்தில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் (பிரச்சாரம்) இப்போதே சூடு பிடிக்கத் துவங்கிவிட்டது.