Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

பிரித்தானியாவில் 9000 பேருக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்பு: பிரபல டெலிவரி நிறுவனம் அறிவிப்பு

0 1

டெலிவரி துறையில் முன்னணி நிறுவனமான Evri பிரித்தானியாவில் 9000 பணியிடங்களுக்கு ஆட்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

டெலிவரி துறையில் முன்னணி நிறுவனமான Evri, அப்பல்லோ குளோபல் மேனேஜ்மென்ட்(Apollo Global Management) நிறுவனத்தால் பல பில்லியன் பவுண்டுகளுக்கு கையகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் 9,000 புதிய பணியாளர்களை நியமிக்க உள்ளது.

ஆன்லைன் டெலிவரி சேவைகளுக்கான அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அதன் பணியாளர்களை அதிகரித்து செயல்பாடுகளை விரிவுபடுத்துவதே இதன் நோக்கமாக பார்க்கப்படுகிறது.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கருணைக் கொலை மசோதா அறிமுகம்: அதிகரிக்கும் விவாதங்கள்
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கருணைக் கொலை மசோதா அறிமுகம்: அதிகரிக்கும் விவாதங்கள்
அஞ்சலர்கள்(couriers), கிடங்கு ஊழியர்கள்(warehouse staff) மற்றும் பிற துணைப் பணியாளர்கள் என அனைத்து நிலைகளிலும் இந்த புதிய பணியாளர் தேர்வு பிரித்தானியா முழுவதும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்து, சஃபோக்கில்(Suffolk) உள்ள பரி செயிண்ட் எட்மண்ட்ஸ்(Bury St Edmunds), டெவானில்(Devon) உள்ள பிளைமவுத்(Plymouth) மற்றும் கேட்விக் விமான நிலையம்(Gatwick Airport) ஆகியவை முக்கிய பணியிடங்களாகும்.

இதில், சுமார் 8,000 அஞ்சலர்கள் மற்றும் 1,000 கிடங்கு மற்றும் துணைப் பணியாளர்கள் என மொத்தம் 9,000 பேரை பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அஞ்சலர்களுக்கு மணிக்கு சராசரியாக £16.50 ஊதியம் வழங்கப்படும்.

நாள்தோறும் 4 மில்லியன் பொட்டலங்களை டெலிவரி செய்யும் இலக்கை நிர்ணயித்துள்ள நிலையில் இந்த விரிவாக்கம் நடைபெறுகிறது.

சுமார் £2.7 பில்லியனுக்கு அப்பல்லோ குளோபல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து Evri நிறுவனத்தின் வளர்ச்சி ஆர்வம் அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.