Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

மீண்டுமொரு வரிசை யுகம்! செப்டெம்பர் 21இல் தெரியும் இறுதி முடிவு

0 1

2022ஆம் ஆண்டு அனுபவித்தது போல மீண்டுமொரு வரிசை யுகத்திற்கு செல்வதா, இல்லையென்றால் தேர்தலின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) முழுமையான ஒத்துழைப்பை வழங்கி தற்போதைய பொருளாதார முன்னேற்றத்தை நிலையானதாக்குவதா என்பதை நாட்டு மக்கள் தீர்மானித்து செப்டெம்பர் 21ஆம் திகதி இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க(Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பொருளாதார ரீதியில் 2022 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த எமது அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானங்களினால் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

பொருளாதார நெருக்கடியின் போது மாறுப்பட்ட அரசியல் கொள்கையுடைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்கினோம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டங்களினால் நாடு இரண்டாண்டுக்குள் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுள்ளது.

பொருளாதார மறுசீரமைப்புக்களுக்காக எடுத்த தீர்மானங்களினால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். மறுசீரமைப்புக்களினால் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீட்சியடைந்துள்ளது.

எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்று அரசியல்வாதிகள் மாத்திரமே குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். முன்னேற்றத்தை நாட்டு மக்கள் உணர்ந்துக் கொண்டுள்ளார்கள்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு எதிர்க்கட்சிகள் எவ்வித ஒத்துழைப்பையும் வழங்கவில்லை. நெருக்கடிகளை மாத்திரமே ஏற்படுத்தினார்கள்.

ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் இடம்பெறும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

2022 ஆம் ஆண்டு வரிசை யுகத்துக்கு மீண்டும் செல்வதா அல்லது தற்போதைய பொருளாதார முன்னேற்றத்தை நிலையானதாக்குவதா என்பதை நாட்டு மக்கள் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி தீர்மானிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.