D
விஜய் மற்றும் சீமான் ஆகிய இருவருடன் இணைந்து அரசியல் பயணம் செய்வதற்கு தயாராக இருப்பதாக அமீர் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் உள்ள கடை திறப்பு விழாவில் இயக்குநரும், நடிகருமான அமீர் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திக்கையில், “இந்தியாவின் முதுகெலும்பு என்பது கிராமங்கள் தான். திரைப்படத்துறையில் கிராமங்களை தவிர்த்து எந்தவொரு படத்தையும் எடுக்க முடியாது.
அனைவரும் அரசியலில் இருக்க வேண்டும். நான் அரசியலுக்கு வந்தாலும் வரலாம். என்னுடைய உள்ளுணர்வு சொல்கிறது. விஜய் என்னை அவருடைய கட்சிக்கு அழைத்தால் நிச்சயமாக செல்வேன்.
விஜய் மற்றும் சீமான் ஆகிய இருவருடன் இணைந்து அரசியல் பயணம் செய்வதற்கு நான் தயாராக உள்ளேன்.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதால், மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது தெளிவாக புரிகிறது. அதனை சில அரசியல் தலைவர்கள் ஆதரிப்பது வேதனையாகவும் உள்ளது.
தமிழகத்தின் துணை முதலமைச்சர் பதவியை உதயநிதிக்கு கொடுத்தால் மகிழ்ச்சி. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக தான் உள்ளது” என்று பேசினார்.