Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

இலங்கையில் மீண்டும் போராட்டம் வெடிக்குமா..! வெளியான அறிவிப்பு

0 2


ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் புதிய போராட்டமொன்றிற்கு வழி வகுக்கும் என சில தரப்பினரால் முன்னெடுக்கப்படும் பிரசாரங்களில் எவ்வித உண்மையும் இல்லை என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமால் குணரத்ன(Kamal Gunaratne) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு ஊடகவியலாளர் ஒருவர், “விரும்பிய தேர்தல் முடிவுகள் கிடைக்காவிட்டால், இலங்கையில் இரண்டாவது போராட்டம் நடத்தப்படலாம் என இலங்கையில் உள்ள சிலர் கூறியுள்ளனர்.மறுபடியும் போராட்டம் நடக்காமல் இருக்க பாதுகாப்பு படையினர் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளார்களா என கேட்டார்.

இதற்கு பதிலளித்த பாதுகாப்பு செயலாளர், “அப்போது ஏற்பட்ட நிலைமை மிகவும் திடீர் நிலைமை.ஆனால் எல்லாவற்றையும் ஆய்வு செய்து ஏன் இப்படி நடந்தது இதற்கு யார் பொறுப்பு என்பதை கண்டறிந்து தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

எனவே அப்படியொரு நிலை மீண்டும் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை.அப்படியான சூழ்நிலையை தடுக்க காவல்துறையினர் தயாராக உள்ளனர். அவர்களால் நிலைமையை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.