Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

யாழில் சிறுமியொருவரை தகாத முறைக்கு உட்படுத்திய இளம் குடும்பஸ்தர் கைது

0 0

யாழ்.நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லியடி – துன்னாலை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 9 வயதுச் சிறுமி ஒருவரை கடத்திச் சென்று தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் சந்தேக நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(31.07.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது அதே பகுதியை சேர்ந்த 33 வயதுடைய திருமணமான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.