Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

லண்டன் மெட்ரோ தொடருந்து நிலைய தாக்குதல்: நீதிமன்றம் எச்சரிக்கை

0 1

பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டு சர்க்கஸ் மெட்ரோ தொடருந்து நிலையத்தில் பயணி ஒருவரை திடீரென தண்டவாளத்தில் தள்ளிய ஒருவர் மீது கொலை முயற்சி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2023 பெப்ரவரி 3ஆம் திகதியன்று 24 வயதான குர்திஷ் குடியேற்றவாதியான ப்ருவா ஷோர்ஷ்(Brwa Shorsh) என்ற நபர், 61 வயதான தபால்காரரான டேடீஸ் போடோசெக்கை(Tadeusz Potoczek)தொடருந்து நிலையத்தில் வைத்து தாக்கியுள்ளார்.

இது தொடர்பில் வெளியான அதிர்ச்சியூட்டும் சிசி ரீவி காட்சிகளில், ப்ருவா ஷோர்ஷ் தண்டவாளத்திற்கு முன் நின்று கொண்டிருந்த தபால்காரர் போடோசெக்கை கடுமையாக தள்ளியதில் அவர் தண்டவாளத்தில் தடுமாறி விழுவது தெளிவாக தெரிகிறது.

இந்நிலையில் தொடருந்து வருவதற்கு முன் போடோசெக் தண்டவாளத்தில் இருந்து வெளியேறி உயிர் தப்பியுள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான 24 வயதான ப்ருவா ஷோர்ஷ், தன்னை அவனமானப்படுத்தும் செயலைக் கண்டித்து தாக்கியதாக தெரிவித்தார்.

ஆனால், குற்றவாளி திட்டமிட்டு கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்தியதாக குற்றப் பிரிவினர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர்.

இறுதியில், ப்ருவா ஷோர்ஷை குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும், இந்த குற்றத்தை மிகவும் தீவிரமானது என்றும் ஷோர்ஷ்க்கு நீண்ட கால சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் நீதிபதி எச்சரித்துள்ளதோடு,  தண்டனை செப்டம்பர் 26ஆம் திகதி அன்று விதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.