D
கிளப் வசந்தவின் கொலையின் மூளையாக கருதப்படும் பாதாள உலக தலைவர் கஞ்சிபானை இம்ரான் மற்றும் பாதாள உலக உறுப்பினர் லொக்கு பட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கஞ்சிபானை இம்ரான் பெலாரஸில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,லொக்கு பட்டி டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலை பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானை இம்ரானால் திட்டமிடப்பட்டதாகவும், டுபாயைச் சேர்ந்த பாதாள உலகக் குழு உறுப்பினர் லொகு பட்டி என்பவரால் வழி நடத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் பிரான்சில் பதுங்கியிருந்த கஞ்சிபானை இம்ரான், பெலாரஸுக்குத் தப்பிச் செல்ல முயன்ற போது பிரான்ஸ் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானை இம்ரான், கிளப் வசந்தவைக் கொலை செய்ய பல கோடி ரூபாவுக்கும் மேல் செலவிட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.