D
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesingh) ஆதரவளிப்பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தெரிவித்ததை அடுத்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சட்டப்பூர்வமான பொதுச் செயலாளர் என்று கூறிக்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அந்த ஆதரவு அறிவிப்பை திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியை வலுக்கட்டாயமாக பிடித்து வைத்திருக்கும் அமைச்சர் நிமல் சிறிபால, ஜனாதிபதி விக்ரமசிங்கவுக்கு கட்சியின் ஆதரவை அறிவித்துள்ளார்.
எனினும் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில், மத்திய குழுவில் எந்த முடிவும் எடுக்கப்பட வேண்டும் என்பதால், இந்த ஆதரவை தாம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக தயாசிறி குறிப்பிட்டுள்ளார்.
ரணிலுக்கு ஆதரவு வெளியிட்டவர்களுக்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்த சட்டப்பூர்வ உரிமை இல்லை.
எனவே, கட்சியின் சட்டபூர்வமான செயலாளர் என்ற வகையில், கட்சியை அரசாங்கத்துடன் இணைக்கும் இந்த முயற்சிகளை தாம் கண்டிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவரது வெற்றிக்கு ஆதரவு தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்;திருந்தது.