D
புத்தளம் – வென்னப்புவ பிரதேசத்தில் மாணிக்கக்கல் வியாபாரி உட்பட இருவரை கடத்திச்சென்று இரண்டு கோடி ரூபா மற்றும் இரத்தினக்கல்லை கொள்ளையடித்த கும்பலை கண்டுபிடிக்க பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சீருடைக்கு நிகரான ஆடைகளை அணிந்திருந்த 8 பேர் அடங்கிய குழு இந்த கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக சீதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவர் கடந்த 29ஆம் திகதி தனது நண்பருடன் சீதுவ பிரதேசத்திற்கு மாணிக்கக்கல்லை கொள்வனவு செய்ய வந்துள்ளார்.
சீதுவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த கொடுக்கல் வாங்கல் இடம்பெற்று கொண்டிருந்த போது, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவொன்று வந்து மாணிக்க வர்த்தகரையும், அவரது நண்பரையும் வானில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர்.
இதன்போது மாணிக்கக்கற்களையும், இரண்டு கோடி ரூபா பணத்தினையும் எடுத்துக்கொண்டு நடுவீதியில் விட்டுச்சென்றுள்ளனர்.
இது தொடர்பில் சீதுவ பொலிஸில் வர்த்தகர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பல பொலிஸ் குழுக்கள் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகநபர்கள் கொள்ளையர்கள் எனவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அல்ல எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.