Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

நாட்டில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பாரிய திட்டங்கள்

0 2

கோவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த 171 பாரிய திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ”இவற்றில் 58 செயற்றிட்டங்களை இந்த வருடமும் அடுத்த வருடமும் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, குடிநீர், சுகாதாரம், கல்வி, வீதிகள் போன்ற துறைகள் தொடர்பான 58 திட்டங்கள் இந்த ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள 171 திட்டங்களில் 02 வெளிநாட்டு மானிய திட்டங்கள், 03 வெளிநாட்டு கடன் திட்டங்கள் மற்றும் 08 திட்டங்கள் உள்ளூர் நிதியில் செயற்படுத்தப்பட்டுள்ளது.

அந்த 08 திட்டங்களும் உள்ளடங்கலாக நிதியமைச்சின் அறிக்கைகளின் படி, அடுத்த வருடத்தில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படும் திட்டங்களின் எண்ணிக்கை 113 ஆகும்.

இந்நிலையில், கோவிட் தொற்றுநோய் நிலைமை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் பல பெரிய அளவிலான திட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட்டன.

அவற்றுள் வெளிநாட்டு உதவி மற்றும் கடனில் செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் இருந்தன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர், இந்த செயற்றிட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அவர் தலையிட்டார்.

இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றப்படவேண்டிய அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் இலக்காகும். இது எதிர்வரும் ஆண்டுகளில் முன்மொழியப்பட்ட புதிய திட்டங்களை ஆரம்பிக்க அனுமதிக்கும்.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதற்கு பாதியில் நிறுத்தப்பட்ட செயற்றிட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டமை நல்ல சான்றாகும்.

நாடு மறுவளர்ச்சிப் பாதையில் நுழைந்துள்ளது என்பதற்கும் இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. எதிர்க்கட்சிகள் என்ன அவதூறுகளை கூறினாலும் தற்போதைய ஜனாதிபதியின் கீழ் நாடு மீண்டு வருகிறது” என விளக்கியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.