D
ரஷ்யாவிற்கும் (Russia) மேற்கு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றத்தில் அமெரிக்காவின் (US) ஊடகவியலாளர் இவான் கெர்ஷ்கோவிச் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பெர்லினில் நாடு கடத்தப்பட்டவரைக் கொலை செய்ததன் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த கைதி பரிமாற்றத்தில் மொத்தம் 24 நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
பனிப்போர் காலத்திற்கு பிறகு ரஷ்யா மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பதிலாக, அமெரிக்கா, நோர்வே, ஜெர்மனி, போலந்து மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளில் உள்ள சிறைகளில் இருந்து உளவுத்துறை நடவடிக்கைகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் உட்பட எட்டு ரஷ்யர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் இடம்பெற்றுள்ள இந்த கைதி பரிமாற்ற நடவடிக்கையானது, சுமார் 18 மாதங்களுக்கு மேலாக திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊடகவியலாளர் உள்ளிட்ட அமெரிக்க குடிமக்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து அமெரிக்க அதிகாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.