D
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் களம் நாளுக்கு நாள் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கின்றது.
உட்கட்சி மோதல்களும், இரகசிய காய்நகர்த்தல்களும் என்று பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இலங்கை அரசியல் களம் நகர்கின்றது.
இனிவரும் நாட்களில் இந்தநிலை மேலும் தீவிரமடையவுள்ளதுடன், சர்வதேசத்தின் பார்வையும் இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் மீது நிலைகொண்டுள்ளது.
இந்தநிலையில், இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இந்தியாவின் புலனாய்வுத் துறையான றோ வின் முடிவு மற்றும் நகர்வுகள் தொடர்பில் இலங்கையின் புலனாய்வு செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் விபரித்துள்ளார்.
மேலும், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கையாள்வதில் பலருக்கு திண்டாட்டமான நிலை காணப்படுகின்றது என்றும் புலனாய்வுச் செய்தியாளர் நிலாம்டீன் சுட்டிக்காட்டியுள்ளார்.