Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

நாட்டில் உருவாக்கவுள்ள மாபெரும் கூட்டணி! திணறும் ரணில் அரசாங்கம்

0 2

எதிர்க்கட்சி தலைவரின் வெற்றியை உறுதிப்படுத்தும் கொள்கை அடித்தளத்துடன் எதிர்வரும் 8 ஆம் திகதி மாபெரும் கூட்டணி உருவாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், ”தற்போதைய அரசாங்கத்தின் ஆயுட்காலம் இன்னும் 46 நாட்களில் முடிவடையும். அரசாங்கம் தற்போது தனிப்பெரும்பான்மையை இழந்துள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் 134 வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி தற்போது தமக்கு 92 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவே இருப்பதாக கூறுகிறார்.” என ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.