D
வாக்களிக்கும் போது தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் என இனங்காணப்பட்ட சுமார் ஒன்றரை இலட்சம் பேருக்கு தற்காலிக அடையாள அட்டைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் என இனங்காணப்பட்டவர்களில், தோட்ட மக்களும், LGBTIQ சமூகமும் பெரும்பாலும் அடங்குவர்.
இந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஒரு கோடியே எழுபத்தி ஒரு இலட்சம் வாக்காளர்களில் அடையாள அட்டை இல்லாத மக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி தற்காலிக அடையாள அட்டை வழங்குவதற்கு அனைத்து கிராம அதிகாரிகளும் தயாராக உள்ளனர்.
இது தொடர்பில் உதவி, பிரதி தேர்தல் ஆணையாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
LGBTIQ சமூகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளை அங்கீகரிக்க GRC சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சான்றிதழின் படி, வாக்குச்சாவடியில் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் இல்லை. மேலும், வீட்டில் இருந்தே வாக்காளர் பதிவேட்டில் முதலில் பெயரைப் பதிவு செய்ய வேண்டும்.
எனினும், ஒவ்வொரு மாகாணமாகச் சென்று இந்தச் சமூகத்திற்கு என்ன தேவை என்பதை ஆராய்ந்தோம். அதன்படி, பல சிக்கல்கள் கண்டறியப்பட்டுள்ளன.” என தெரிவித்துள்ளார்.