D
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் அரசியல் மாநாடு திருச்சியில் நடைபெறவுள்ளது.
கட்சியின் கொள்கைகளை கொண்டு செல்வதற்காக தமிழக வெற்றிக் கழகம் பிரம்மாண்டமாக மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது.
அதற்கான ஏற்பாடுகளை புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஒரு மாநில மாநாடு, 4 மண்டல மாநாடு, மாவட்ட பொதுக் கூட்டங்களை நடத்துகின்றனர்.
முதலில் மாநில மாநாட்டை நடத்தி, அடுத்தடுத்து மண்டல மாநாடு, மாவட்ட பொதுக்கூட்டங்கள் மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபயணங்களை மேற்கொள்ள விஜய் திட்டமிட்டிருக்கிறார்.
தற்போது திருச்சி மாவட்டத்தில் நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
அந்தவகையில், திருச்சி பொன்மலை ஜி-கார்னர் திடலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை செப்டம்பர் 25ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அதற்கு அனுமதி கோரி கோட்ட மேலாளிடம் அக்கட்சி நிர்வாகிகள் கடிதம் வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.
மாநாட்டில் பங்கேற்கும் 10 லட்சம் பேருக்கு உணவு சமைப்பதற்கான ஆர்டரும் கொடுக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.