Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

கனடாவில் அதிகரிக்கப்படவுள்ள விமான பயண கட்டணங்கள்

0 1

கனடாவின்(Canada) கல்கரி பகுதியில் விமான பயண கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அங்கு பெரிய கொல்ப் பந்து அளவில் ஆலங்கட்டி மழை பெய்துவருவதன் காரணமாக விமானங்கள் பயணம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும், சில நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானங்கள் இந்த ஆலங்கட்டி மழையினால் சேதம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதிக அளவில் விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்ட காரணத்தினால் விமான பயண கட்டணங்கள் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக வரையறுக்கப்பட்ட விமான பயண சீட்டுக்களே காணப்படுவதனால் அதற்கான கேள்வி அதிகரிக்கும் எனவும் இதன் மூலம் விமான பயண கட்டணங்கள் உயர்வடையும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.