D
எந்தவொரு வேட்பாளரும் தேர்தல் சட்டங்களை மீறினால், ஜனாதிபதி தேர்தலின் பின்னரும் அவர்களின் பதவிகளை நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகள் மற்றும் தற்போதுள்ள அளவுகோல்களின் அடிப்படையில் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும்.
அத்துடன் தேர்தல் சட்டத்தை மீறுவோருக்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு வேட்பாளரும் தேர்தல் சட்டங்களை மீறினால், ஜனாதிபதி தேர்தலின் பின்னரும் அவர்களின் பதவிகளை நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.