Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் தொடர்பான அறிவிப்பு

0 2

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நாளை காலை 9 மணிக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வேட்புமனுக்கள் தொடர்பான ஆட்சேபனைகளை நாளை காலை 11.00 மணி முதல் 11.30 வரை தெரிவிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

ஆட்சேபனைக்கான நேரம் நிறைவடைந்ததன் பின்னர் கட்சிகள் மற்றும் சுயாதீன வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்கள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 16 வேட்பாளர்களும், வேறு அரசியல் கட்சிகள் சார்பில் ஒரு வேட்பாளரும், சுயேட்சை வேட்பாளராக 15 பேரும் மொத்தமாக இதுவரை 32 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்

Leave A Reply

Your email address will not be published.