D
காலி – ஹிக்கடுவ நகரில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு முயற்சியொன்று தோல்வியடைந்துள்ளது.
டி 56 துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் நேற்று (14) பிற்பகல் இந்த துப்பாக்கிச்சூட்டை மேற்கொள்ள முயற்சித்துள்ளனர்.
இதன்போது துப்பாக்கி இயங்காத காரணத்தினால் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதுடன், முச்சக்கர வண்டி சாரதி ஓடி ஒளிந்துள்ளார்.
குறித்த இடத்தில் T56 ரக துப்பாக்கி ரவை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.