D
ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பந்துல லால் பண்டாரிகொடவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.
மனுஷ நாணயக்கார மற்றும் ஹரீன் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை பறிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் கட்சி எடுத்த தீர்மானம் சட்டப்பூர்வமானது என கடந்த 9 ஆம் திகதி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்த தீர்ப்பிற்கமைய, அவர்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் பறிக்கப்பட்டன.
2020ஆம் ஆண்டு பொது தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் காலி மாவட்ட விருப்புப் பட்டியலில் மனுஷ நாணயக்கார இரண்டாவது இடத்தைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவான நிலையில் அவரின் பதவி பறிக்கப்பட்டதால், விருப்பு பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பெற்ற பந்துல லால் பண்டாரிகொடவுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.