Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

பாரீஸ் ஒலிம்பிக்கில் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ள பாலின விவகாரம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

0 2

பாரீஸ்(Paris) ஒலிம்பிக் போட்டிகளில் சர்ச்சைக்குள்ளான குத்துச்சண்டை வீராங்கனையான இமானே கெலிஃப் (Imane Khelif) கொடுத்த முறைப்பாடுக்கமைய, பிரான்ஸ் அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளார்கள்.

நடைபெற்று முடிந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பல சர்ச்சைகள் ஏற்பட்டது.

அதில் அல்ஜீரிய குத்துசண்டை வீராங்கனையான இமானே கெலிஃப் என்னும் பெண், வெறும் 46 விநாடிகளில், தன்னுடன் மோதிய இத்தாலி நாட்டு வீராங்கனையான ஏஞ்சலா கரினி( Angela Carini) என்னும் பெண்ணை, இரண்டே குத்துக்களில் தோற்கடித்தார்.

இந்த சம்பவமானது, உலகளவில் பேசுபொருளானது.

இதில் அடிவாங்கிய அந்த ஏஞ்சலா கரினி என்னும் பெண், இமானே கெலிஃப் அடித்த அடி பெண்கள் அடித்தது போல இல்லை என்றும், தனக்கு கடுமையான வலி ஏற்பட்டுள்ளதாகவும் கண்ணீருடன் தெரிவித்தார்.

அதிலும் இந்த விடயம் தொடர்பில் ஏஞ்சலா கரினிக்கு ஆதரவாக, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப், அவரது ஆதரவாளரான JD Vance, உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க் மற்றும் ஹாரி பாட்டர் எழுத்தாளரான JK Rowling ஆகியோர் பேச தொடங்கினர்.

அவர்கள், பெண்கள் குத்துச்சண்டை போட்டிகளில் ஆண்களை அனுமதிக்கக்கூடாது என்னும் ரீதியிலும், Angelaவுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் அவர்கள் விமர்சனங்களை முன்வைத்தார்கள்.

இந்நிலையில், தன்னை நிகழ்நிலையில் சைபர் துன்புறுத்தல் செய்ததாக சம்பந்தப்பட்டவர்கள் மீது இமானே கெலிஃப் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டை தொடர்ந்து பிரான்ஸ் அதிகாரிகள் இது தொடர்பில் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.