D
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவருக்கும் தாம் ஆதரவளிக்க தீர்மானிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
சில ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் தான் தொடர்பில் தெரிவிக்கும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சரியான நேரத்தில் தமிழரசுக்கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.