Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

கணவன் வேண்டாம் என சொல்லியும் சத்யாவிற்காக மீனா செய்த விஷயம்… செம கோபத்தில் முத்து, சிறகடிக்க ஆசை புரொமோ

0 1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று முத்துவின் மாஸ் சீன்கள் இடம்பெற்றுள்ளன.

மனோஜ் தனது மனைவி ரோஹினிக்கு தாலி செயின், அம்மாவிற்கு பட்டுப் புடவை என வாங்கியவர் அண்ணாமலைக்கு வெறும் துண்டு வாங்கி கொடுத்துள்ளார். அதைக்கண்டு முத்து கோபப்பட அண்ணாமலை அவரை தடுக்கிறார்.

அடுத்து இதையெல்லாம் தான் Credit Card மூலமாக தான் வாங்கினேன் என மனோஜ், ரோஹினியிடம் கூறுகிறார். பின் கார் சவாரிக்கு வந்தவரிடம் சிட்டி பணம் கேட்டு மிரட்ட அந்த இடத்திற்கு முத்து வந்து மாஸ் செய்கிறார்.

தற்போது அடுத்த வார கதைக்களத்திற்கான குட்டி புரொமோ ஒன்று வெளியானது.

அதில் முத்து மீனாவிடம் புருஷனுக்கு மரியாதை இல்லாத இடத்திற்கு நீ செல்ல மாட்டாய் என நம்புகிறேன் என்று கூறிவிட்டு செல்கிறார்.

சத்யா, மீனாவிற்கு போன் செய்து என் பிறந்தநாளுக்கு உன்னை வரக் கூடாது என கூற அவர் யார் என சண்டை போடுகிறார், ஸ்ருதியும் நீங்கள் செல்லுங்கள் என்கிறார்.

பின் கோவிலில் மீனாவை சத்யாவுடன் முத்து பார்க்கிறார், கண்டிப்பாக இவர்களுக்குள் அடுத்த வாரம் பெரிய சண்டையே இருக்கும் என தெரிகிறது.

Leave A Reply

Your email address will not be published.