D
கருக்கலைப்பினை சட்ட ரீதியாக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
தகாத செயற்பாட்டுக்கு உள்ளாகும் பதின்ம வயதுடைய சிறுமியர் கருத்தரிக்கும் போது அவற்றை கலைப்பதற்கு சட்ட ரீதியான அனுமதி வழங்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.
இலங்கையில் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தகாத செயற்பாட்டுக்கு உள்ளாகும் சிறுமியர் எந்த தவறும் செய்யாத அப்பாவிகள் எனவும், அவர்கள் கருவினை கலைப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளார்.
இந்த ஆண்டின் முதல் அரையாண்டுப் பகுதியில் பதின்ம வயதுடைய சிறுமியர் கருத்தரித்த எண்ணிக்கை 58 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
எனவே பதின்ம வயதுடைய சிறுமியர் துஸ்பிரயோகங்களின் போது கருவுற்றால் அவ்வாறான சந்தர்ப்பங்களில், கருக்கலைப்பு செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.