Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

அமெரிக்காவில் சூடு பிடிக்கும் தேர்தல் பிரசாரம் : கமலா ஹாரிஸை கேலி செய்த ட்ரம்ப்

0 1

கமலா ஹாரிசை(Kamala Harris) விட தான் அழகாக இருப்பதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), தன்னை எதிர்த்து போட்டியிடும் கமலா ஹாரிஸ் குறித்து சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்திலும் ட்ரம்ப் மீண்டும் கமலா ஹாரிஸ் (Kamala Harris) குறித்து பேசியுள்ளார்.

இதன்போது உரையாற்றிய ட்ரம்ப், “ஜோ பைடனை விட கமலா ஹாரிசை தோற்கடிப்பது மிகவும் எளிதானது என நம்புகிறேன். பல முக்கியமான கொள்கைகளை வகுப்பதில் கமலா ஹாரிஸ் தீவிர இடதுசாரியைப் போல் நடந்துகொள்கிறார்.

அவர் சிரிப்பதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? அவர் அழகானவர்; ஆனால் நான் அவரை விட அழகாக இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி ஒபாமா உட்பட, கட்சியின் பல்வேறு மூத்த தலைவர்கள் கமலா ஹாரிஸிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.