Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று வீரா.

0 2

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று வீரா.

இந்த தொடரில் வைஷ்ணவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வர அருண் சேவியர் நாயகனாக நடித்து வருகிறார். ஊர் வம்பு லட்சுமி, பசங்க சிவக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

3 தங்கைகளுக்கு அண்ணனான சுப்பு சூரியன் விபத்தில் இறந்துவிட அந்த விபத்தை ஏற்படுத்தியவரின் குடும்பத்தில் அவரது தங்கைகள் திருமணம் நடக்கிறது. தங்கையாக நடிப்பவர்களில் ஒருவர் தான் சுபிக்ஷா.

இவர் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை சுபிக்ஷாவிற்கு கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவருக்கு நேற்று (ஆகஸ்ட் 18) அவினாஷ் எனபவருடன் திருமணம் நடந்துள்ளது.

அவரது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.