Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

60 வருடங்கள் நிறைவேறாத எதிர்பார்ப்புக்கு கிடைத்தது தீர்வு: அமைச்சருக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு

0 1

கிளிநொச்சி (Kilinochchi) – ஸ்கந்தபுரம், கண்ணாபுரம் வீதியின் புனரமைப்பு பணிகள் 60 வருடங்களின் பின்னர் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து குறித்த பகுதி மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு (Douglas Devananda) தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

குன்றும் குழியுமாக இருந்த குறித்த வீதியால் அப்பகுதி மக்களின் போக்குவரத்தில் நாளாந்தம் பல்வேறு அசௌகரியங்களை ஏற்பட்ட நிலையில் அந்த வீதியை புனரமைத்துக் கொள்வதில் மக்கள் பெரும் சவாலையும் தட்டிக்களிப்மையும் எதிர்கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 20.07.2024 அன்று கண்ணாபுரம் சென்றிருந்த டக்ளஸ் தேவானந்தா அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி மக்களின் தேவைப்பாடுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது, கண்ணாபுரம் பிரதேச மக்களால் தமது பிரதேசத்தின் வீதியை செப்பனிட்டு தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மக்களின் அவசிய தேவையாக இருந்த குறித்த கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்த அமைச்சர், 60 வருடங்களாக புனரமைக்கப்படாதிருந்த கண்ணாபுரம் வீதியை விரைவாக புனரமைப்பதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்திருந்தார்.

இதனை தொடரந்து, குறித்த வீதியின் புனரமைப்பு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றன.

முன்னதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தொடர் முயற்சியின் பயனாக ஸ்கந்தபுரம், கண்ணகைபுரம், அக்கராயன், கோணாவில், ஆனைவிழுந்தான் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த காணிகளற்ற குடும்பங்களுக்கு அப்பகுதியில் உள்ள கரும்புத் தோட்டக் காணி பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் கரும்பு செய்கையை மேலும் விருத்தி செய்வதற்காக ஸ்கந்தபுரத்திலுள்ள கரும்புகுத்தோட்ட காணி உரிமையாளர்களின் நலன்கருதி கட்சி நிதியிலிருந்து 15 இலட்சம் ரூபாய் நிதியை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வழங்கியிருந்தார்.

ஸ்கந்தபுரம் – கரும்புத்தோட்ட விவசாய அமைப்பினரின் கோரிக்கைக்கு அமைய குறித்த நிதியுதவி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.