D
அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகிய தரப்புக்களினால் நிராகரிக்கப்பட்ட காரணத்தினால் சம்பிக்க ரணவக்க சஜித்திடம் சரணடைந்தார் என நாடாளுமன் உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சம்பிக்க எம்முடன் இணைந்து கொள்ள முயற்சித்தார் நாம் அவரை ஏற்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ கூறியதாக கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ரணிலை போற்றினாலும் சம்பிக்கவை அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளப் போவதில்லை என அரசாங்க தரப்பும் கூறியதாக கம்மன்பில மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு அனைத்து தரப்பினரும் நிராகரித்த காரணத்தினால் சம்பிக்க ரணவக்க மீண்டும் சஜித் தரப்பிடமே செல்ல நேரிட்டதாக தெரிவித்துள்ளார்.
யாரும் ஏற்றுக்கொள்ளாதவர்களை சஜித் தரப்பு ஏற்றுக்கொள்வதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.