D
இலங்கை அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதன் பின்னர், குறைந்தது 43 பாகிஸ்தான் கைதிகள் இலங்கையிலிருந்து திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி இன்று அறிவித்துள்ளார்.
இலங்கை உயர்ஸ்தானிகர் ரவீந்திர சந்திர சிறிவிஜய் குணரத்னவுடன் இடம்பெற்ற சந்திப்பை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள், நாடு திரும்புவதற்கு வசதியாக கடந்த ஒரு மாதமாக இலங்கை அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சகம் நெருக்கமாக ஒத்துழைத்ததாக நக்வி கூறினார்.
இந்த ஒப்பந்தத்தை இராஜதந்திர முயற்சிகளின் சாதகமான விளைவு என்று விபரித்த அவர், பாகிஸ்தான் கைதிகளை நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் சில நாட்களில் முடிவடையும் என்றும் கூறினார்.