D
மலையக பாதையின் தொடருந்து சேவையில் தடை ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
பலான பிரதேசத்தில் மரமொன்று வீதியில் வீழ்ந்ததால் இவ்வாறு தொடருந்து சேவை தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரைக்கும் பதுளை மற்றும் கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் தொடருந்துகள் இதனால் தாமதமாகலாம் எனவும் நாவலப்பிட்டி தொடருந்து கட்டுப்பாட்டு அறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் தொடருந்து பாதையில் வீழ்ந்துள்ள மரத்தை வெட்டி அகற்றி மலையக தொடருந்து பாதையில் சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.