Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

வேட்பாளர்களுக்கான பிரசார காலத்தை நிர்ணயிக்க சீட்டிலுப்பு முறை

0 0

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பிரசார காலத்தை நிர்ணயம் செய்வதற்கு சீட்டிலுப்பு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அரச இலத்திரனியல் ஊடகங்களில் ஜனாதிபதி வேட்பாளர்கள் பிரசாரம் செய்வதற்கு காலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 6ம் திகதி முதல் வேட்பாளர்கள் அரச இலத்திரனியல் ஊடகங்களின் மூலம் பிரசாரம் செய்ய முடியும்.

நேரத்தை ஒதுக்கீடு செய்வது தொடர்பில் நேற்றைய தினம் சீட்டிலுப்பு நடத்தப்பட்டது.

அரச இலத்திரனியல் ஊடகங்களான தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் மற்றும்  இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்பனவற்றின் ஊடாக தலா 15 நிமிடங்களைக் கொண்ட மூன்று சந்தர்ப்பங்கள் வேட்பாளர் ஒருவருக்கு வழங்கப்பட உள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களுக்காவும் அவர்களது பிரதிநிதிகள் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளும் சீட்டிலுப்பில் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.