D
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அபுதாபியிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வந்த ஒரு தொகை சிகரெட்டுடன் அவர் சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் 3.18 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அபுதாபியில் இருந்து EY390 விமானத்தில் வந்த பன்னிபிட்டியைச் சேர்ந்த 44 வயதுடைய ஆண் ஒருவர் சட்டவிரோதமாக 108 மான்செஸ்டர் சிகரெட்டுகளை இலங்கைக்குள் கொண்டு வந்துள்ளார்.
இதன் சந்தை மதிப்பு 2.2 மில்லியன் ரூபாய் என விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.