Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைப்பு : தீர்மானத்துக்காக வருந்தவில்லை என ஜனாதிபதி தெரிவிப்பு

0 1

உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடுவது குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என்பதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe), எனினும் தாம் மேற்கொண்ட இந்த தீர்மானத்திற்காக வருந்தப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களின் பாதுகாப்பைப் பேணுவதற்கும் இந்த காலம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளதால், குறித்த தீர்மானம் தொடர்பில் தாம் வருத்தமடையவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைத்ததன் மூலம் ஜனாதிபதி, நிதியமைச்சர் மற்றும் அப்போதைய தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து இந்த கருத்து வெளியாகியுள்ளது.

வாக்களிக்கும் உரிமை மற்றும் வாழும் உரிமை ஆகிய இரண்டிற்கும் தனது மரியாதையை ஜனாதிபதி, இதில் வலியுறுத்தியுள்ளார்.

புதிய மக்கள் முன்னணியின் (NPF) தேசிய மாநாட்டில், நேற்று  உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு நேரத்தை ஒதுக்கியிருந்தால், பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்திருக்க முடியாது என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.