Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

சூடு பிடிக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : கமலா ஹாரிசிற்கு பெருகும் ஆதரவு

0 0

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசிற்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன்(Bill Clinton) மகிழ்ச்சியின் ஜனாதிபதிக்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

எங்களிற்கு மகிழ்ச்சியின் ஜனாதிபதி கமலா ஹரிஸ்(Kamala Harris) தலைமை தாங்கவேண்டிய தேவையுள்ளது, நான் எனது கடமையை செய்கின்றேன் நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் 42 ஆவது ஜனாதிபதியான பில் கிளின்டன் அமெரிக்கா மேலும் அதிகளவிற்கு அனைவரையும் உள்வாங்குவதாகவும், அதிகளவிற்கு எதிர்காலம் குறித்து கவனம் செலுத்துவதாகவும் மாறவேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

பல சந்தர்ப்பங்கள், வாய்ப்புகள் காணப்படுகின்ற சூழலில் பல பிரச்சனைகளிற்கு தீர்வை காணவேண்டிய நிலையில் அர்த்தமற்ற சொல்லாட்சிகளில் நாங்கள் சிக்குண்டு கிடப்பது எங்கள் மீதான எவ்வளவு பெரும் சுமை என்பதை நீங்கள் சிந்தித்து பாருங்கள், என வேண்டுகோள் விடுத்துள்ள பில் கிளின்டன், கமலா ஹரிஸ் தலைமை தாங்கும் அமெரிக்காவை விரும்புவதாக கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.