D
பெலியத்தை நோக்கி பயணித்த விரைவு தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பேருவளை தொடருந்து பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பேருவளை சிறிநிவாச பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் தொடருந்து கடவையை அண்மித்து பயணித்துக்கொண்டிருந்த வேளை தொடருந்தில் மோதுண்டு படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து, பேருவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.