Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

ஜனாதிபதித் தேர்தலில் மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப் பெட்டிகள் : வெளியான தகவல்

0 1

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப் பெட்டிகளால் செய்யப்பட்ட வாக்குப்பெட்டிகள் மட்டுமே பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை தேர்தல் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து வாக்குப்பெட்டிகள் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவுகளில் தயாரிக்கப்பட்டு வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வருட தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 10 பில்லியன் ரூபா போதுமானதாக இருக்குமா என ஊடகங்கள் கேள்வியெழுப்ப எட்டு பில்லியன் ரூபா மட்டுமே செலவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி தேர்தலானது செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.