Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

இலங்கையில் எரிசக்தி மற்றும் விவசாயத் துறையில் முதலீடு செய்யவுள்ள தென்கொரியா!

0 1

இலங்கையின் (Sri lanka) எரிசக்தி மற்றும் விவசாயத் துறையில் முதலீடு செய்வதற்கு தென்கொரியா (South Korea) இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரிய மக்கள் குடியரசின் முன்னணி தொழில் முயற்சியாளர் ஒருவருக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் (Dinesh Gunawardena) இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மீன்பிடி, சுகாதாரம் மற்றும் நிர்மாணத் துறைகளில் உற்பத்தியை அதிகரிக்கப் பயன்படும் புதிய தொழில்நுட்பத்தில் சாத்தியமான முதலீடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலியாவின் (Australia) யுனைடெட் பெட்ரோலியம் பிரைவேட் லிமிடெட், யுனைடெட் பெட்ரோலியம் லங்கா நிறுவனத்தின் கீழ் தங்கள் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.

இதனை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera)தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.