D
பாடசாலை மாணவிகள் இருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய அதிபர் ஒருவர் தொடர்பில் கதிர்காமம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் (22) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கதிர்காமம் காவல்துறையினர் தெரிவித்தனர்
இப்பாடசாலையில் 8 மற்றும் 9 ஆம் ஆண்டுகளில் கல்வி கற்கும் இந்த மாணவர்கள் விளையாட்டு நடவடிக்கைகளுக்காக பாடசாலைக்கு வந்த போது உணவு உண்பதற்காக ஒதுக்கப்பட்ட அறையில் வைத்து பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த அதிபர் 2021ஆம் ஆண்டு முதல் மாணவியையும், 2023ஆம் ஆண்டு மற்றுமொரு மாணவியையும் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் கதிர்காமம் காவல்துறையினர் அதிபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அதிபர் 49 வயதுடைய திருமணமானவர் எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கதிர்காமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் கதிர்காமம் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.