D
பெண்களின் வாக்குகளின் ஊடாக அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாவார் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அனுர, பெண்களின் சக்தியினால் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார் என்பது உறுதியாகிவிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் இரண்டு தடவைகள் சிந்திக்க வேண்டியதில்லை எனவும் நிச்சயம் அனுரவை ஜனாதிபதியாக்குவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இம்முறை இந்த மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் இனி எந்தவொரு முறையும் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வவுனியாவில் நடைபெற்ற கட்சியின் மகளிர்க் குழு கூட்டமொன்றில் அவர் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார்.