Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

வாட்ஸ்அப் சுயவிவர படம் தொடர்பில் புதிய அம்சம்

0 3

மெட்டா(Meta) நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலி(WhatsApp), சுயவிவர படத்தை உருவாக்குவதற்கான செயற்கை நுண்ணறிவு அம்சத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

இந்த புதிய அம்சம் பயனர்கள் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட சுயவிவரப் படங்களை அமைக்க அனுமதிக்கும்.

வாட்ஸ்அப் செயலி புதுப்பிப்பு கண்காணிப்பாளர் (WABetaInfo) தகவலின் படி, வாட்ஸ்அப் செயலியின் தனிப்பயனாக்கப்பட்ட சுயவிவர படங்களை உருவாக்குவதற்காக செயற்கை நுண்ணறிவு (gen AI) ஐப் பயன்படுத்தும் அம்சத்தை தற்போது மெட்டா(Meta)நிறுவனம் சோதனை செய்து வருகிறது.

ஆண்ட்ராய்ட் (Android) இன் சமீபத்திய பீட்டா புதுப்பிப்பில் கண்டறியப்பட்ட இந்த அம்சம், பயனர்கள் செல்பி எடுப்பதை தவிர்த்து, உரை தூண்டுதல்கள் மூலம் அவர்கள் விரும்பிய சுயவிவர படத்தை விவரிக்க அனுமதிக்கிறது.

இது பயனரின் விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, முக அம்சங்கள் மற்றும் பாகங்கள் போன்ற விவரங்களை உள்ளடக்கிய டிஜிட்டல் படத்தை செயற்கை நுண்ணறிவு ( AI) உருவாக்கும்.

இந்த அம்சம் தற்போது சோதனைக்குட்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், மக்களின் பயன்பாட்டிற்கு எப்போது அனுமதி அளிக்கப்படும் என உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலும், தங்களது உண்மையான புகைப்படங்களை பகிர விரும்பாத, தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு உணர்வு மிக்க பயனர்களுக்கு இது ஒரு மாற்றீடாக அமையலாம்.

அத்துடன், சுயவிவரப் படங்களின் ஸ்கிரீன்ஷாட்களைத் தடுப்பது போன்ற பயனர் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பை மேம்படுத்தும் அம்சங்களை அண்மையில் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியிரந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.