D
இன்றைய ராசிபலன் மே 26, 2024, குரோதி வருடம் வைகாசி 13, ஞாயிற்று கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷம் ராசியில் உள்ள சேர்ந்த பரணி, கிருத்திகை நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று கடினமான நாளாக இருக்கும். இன்று நாள் முழுவதும் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டம தினமாக அமைவதால், உங்கள் சொல் மற்றும் செயலில் கூடுதல் கவனம் தேவை. நேர்மறையான எண்ணத்துடன் செயல்படவும் இல்லை எனில் பிரச்சனைகளை சந்திக்கின்ற நேரம். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட முயற்சி செய்யவும். இன்று உங்களின் பணி சுமை அதிகமாக இருக்கும். உங்கள் வேலைகளை முடிப்பதில் கூடுதல் கவனமும், கடின உழைப்பும் தேவை.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் உடல்நிலை சற்று பின்னடைவை தரக்கூடியதாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உச்சகஸ்தர்களுக்கு இடம் மாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்ப பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். உங்களுக்கு பாராட்டு கிடைக்கும். திருமணமானவர்களுக்கு துணையின் அன்பு, ஆதரவு சிறப்பாக கிடைக்கும். திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். இன்று உங்களின் வியாபாரத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வருவீர்கள்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும் என்பதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று உங்களின் முக்கிய வேலைகள் தடை பட வாய்ப்புள்ளது. வேலைகளை முடிப்பதில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவோம். என்று நண்பர்கள் மூலம் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வர வாய்ப்புள்ளது. யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உழைக்கும் மக்களுக்கு சிறப்பான நாளாக அமையும்.. குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். உங்களின் வேலைகள் சம்பந்தமான பயணங்கள் செல்ல வாய்ப்புள்ளது. பயணங்கள் மகிழ்ச்சியை தரக்கூடியதாக அமையும். உடன் பிறந்தவர்களின் உதவி கேட்டதும் கிடைத்து மகிழ்வீர்கள். வேலை தேடுபவர்களுக்கு சில நல்ல செய்திகள் தேடி வரும். வியாபாரம் முயற்சிகள் அனைத்துத்தை தரும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன் தரக்கூடிய நாள். உங்களுக்கு வர வேண்டிய நிலுவை தொகை கிடைத்து பொருளாதார நிலை வலுவடையும். உங்களின் எதிரிகளை சிறப்பாக சமாளிக்க முடியும். உங்களுக்கு விருப்பமான இடத்திற்கு சுற்றுலா செல்ல தட்டி முடிப்பவர்கள். வயது ஆன ஒரு ஆன்மீக சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது. இன்று உங்களின் எந்த ஒரு வேலையும் யோசித்து செய்வது நல்லது.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமையும். கடந்த கால தவறுகளில் இருந்து நல்ல பாடத்தை கற்றுக்கொள்வீர்கள். பிள்ளைகளிடமிருந்து சில நல்ல செய்திகள் கேட்பீர்கள். இன்று கோபத்தை தவிர்ப்பதும், அவசரப்பட்டு எந்த ஒரு முடிவு எடுப்பதை தவிப்பது அவசியம். உங்களின் குடும்பத்தினருடன், நண்பர்களுடன் பேசி மகிழ்வீர்கள். உங்களின் திட்டமிட்ட வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பங்கு சந்தை முதலீட்டில் கூடுதல் கவனம் தேவை. இன்று நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப உறவில் பரஸ்பர ஒத்துழைப்பு கிடைக்கும். காவல் விஷயத்தில் நிதானம் அவசியம். கோபத்தை தவிர்க்கவும். பணியிடத்தில் உங்களின் திறமைகளை நிரூபிக்க முடியும். விருப்பம் இன்று உங்கள் வேலைகளை கவனத்துடன் செய்வது அவசியம். உங்களின் வருமானம் சிறப்பாக இருக்கும். முதலீடு திட்டத்தில் கவனமாக முடிவு செய்வது நல்லது. அதிகரித்து வரும் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். இன்று புதிய சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலையை மாற்ற நினைப்பவர்கள், அதற்கான உறுதி கடிதத்தை பெற்ற பின் என்ற ஒரு முடிவையும் எடுக்கவும். சிலருக்கு இடமாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வாழ்க்கையில் சில ஏற்றத்தாழ்வுகளைச் சந்திக்க நேரிடும். பணியிடத்தில் நிலவும் பிரச்சனைகளால் கவலை அடைவீர்கள். உங்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் நற்பெயரையும், வெற்றியையும் பெறுவீர்கள். உங்களின் தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் இருக்காது. வேலை தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாள். இன்று நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதாக நிறைவேற்றுவீர்கள். உங்களின் பேச்சுக்கு மரியாதை அதிகரிக்கும். உங்களின் ஆலோசனை பிறருக்கு பயனுள்ளதாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் திறமைகளை நிரூபிப்பீர்கள். இன்று யாருக்கும் கடன் கொடுப்பது அல்லது யாரிடமும் கடன் வாங்குவதை தவிர்ப்பது அவசியம். குழந்தைகள் தொடர்பான விஷயத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று ஆன்மீகத்தில் தீவிரமாக ஈடுபடுவீர்கள். பெற்றோருடன் புனித யாத்திரை செல்ல வாய்ப்புள்ளது. இன்று வீட்டில் சுப விசேஷம், சிறப்பு பூஜைகள் செய்ய வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையின் இனிமையானதாக இருக்கும். காதலில் சில வாக்குவாதங்கள் ஏற்படும். இன்று உங்களின் மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களின் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று சில கவலைகள் மனதை உறுத்தக் கூடியதாக இருக்கும். நீங்கள் செய்த பழைய முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். இன்று எந்த வேலையும் முடிக்க, நினைத்ததை விட கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். இன்று வெளி நபர்களுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களின் பேச்சில் இனிமையை கடைப்பிடிப்பது அவசியம். வங்கி இருப்பு தொகை அதிகரிக்கும். உடல் நலம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை.