Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

இந்திய கடற்றொழிலாளர்களின் தொடர் கைது: மத்திய அரசுக்கு ஸ்டாலின் தகவல்

0 1

இந்திய (India) கடற்றொழிலாளர்கள் 8 பேரை  இலங்கை கடற்படையினர் கைது செய்தமை குறித்து மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (M.K. Stalin) தகவல் அளித்துள்ளார்.

ஏற்கனவே, 116 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காவலில் உள்ள நிலையில், கடந்த ஒரு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அவர்களை விடுவிக்க இராஜதந்திர முயற்சிகளை விரைவுபடுத்துமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் (Jai Shankar) ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

எல்லையை மீறிய குற்றச்சாட்டில் 11 இந்தியர்களை, கடந்த 23ஆம் திகதி இலங்கை கடற்படை கைது செய்த நிலையில், இது ஒரு வாரத்திற்குள் நடந்த இரண்டாவது சம்பவமாகும்.

தற்போது, 116 கடற்றொழிலாளர்களும் 184 படகுகளும்  இலங்கையில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடப்பது, கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.