Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

ஒகஸ்ட் 28 முதல் சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம்

0 0

சூரியன், தெற்கு நோக்கிய ஒப்பீட்டு இயக்கத்தின் அடிப்படையில், இந்த ஆண்டு ஒகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 06 வரை  இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலே செல்லும் என்று  வளிமண்டலவியல்  திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, நாளை 28 ஆம் திகதி மதியம் 12.11 மணியளவில் நெடுந்தீவு பூனகரி, தட்டுவன்கொட்டி மற்றும் சுண்டிக்குளம் ஆகிய இடங்களுக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும்  என்று  வளிமண்டலவியல் திணைக்களம்  கூறியுள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளது என்பதுடன் மற்றைய இடங்களில் முக்கியமாக சீரான வானிலை நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.