D
நாட்டின் போதைப்பொருள் வலையமைப்பின் God father எனக் கருதப்படும் ஷிரான் பாசிக்கின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரியை விபத்துக்குள்ளாக்கிவிட்டு தப்பிச் சென்ற, குறித்த சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்திருந்தனர்.
இதனையடுத்து டுபாயிற்கு தப்பியோடிய நாதின் பாசிக் தலைமறைவாக இருந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை நாடு திரும்பிய போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.