D
தேசிய மக்கள் சக்தி (NPP) வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நகலெடுத்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனவே, தேசிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தின் இரண்டாவது பிரதி இதுவாக இருக்கும் என்றும் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி, தனது விஞ்ஞாபனத்தை விரைவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும், தற்போது அவர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிப்பதற்குப் பதிலாக, தமது விஞ்ஞாபனத்தை வாசித்து வருவதாகவும் கந்தளாயில் நடைபெற்ற பேரணியொன்றில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கையை ஐக்கிய மக்கள் சக்தியினர் அதிகம் பதிவிறக்கம் செய்கின்றனர்.
எனவே, தேசிய மக்கள் சக்தியின் இரண்டாவது தேர்தல் விஞ்ஞாபனத்தை எதிர்பார்க்கலாம் என்றும் ஹந்துன்நெத்தி கூறியுள்ளார்.