D
வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் GOAT. தளபதி விஜய்யுடன் முதல் முறையாக இப்படத்தின் மூலம் கைகோர்த்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் அடுத்த வாரம் 5ஆம் தேதி உலகளவில் வெளிவரவுள்ளது.
இந்த நிலையில், GOAT படத்தை குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் தானாம். தந்தை கதாபத்திரத்தில் ரஜினியையும், மகன் கதாபாத்திரத்தில் தனுஷையும் வைத்து எடுக்க வெங்கட் பிரபு நினைத்து இருந்தாராம்.
ஆனால், அதன்பின் டீ ஏஜிங் குறித்து விஷயங்கள் வெங்கட் பிரபுவிற்கு தெரியவர, இதன்பின் இந்த கதையை தளபதி விஜய்க்கு கூறியுள்ளார். இப்படி தான் GOAT படம் துவங்கியது என தகவல் கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.