D
இலங்கையில் (Sri Lanka) நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலானது என்றுமில்லாத அளவில் பாரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இதனடிப்படையில், இந்த தேர்தலில் சில வெளிநாடுகளின் மறைமுகமான ஈடுபாடுகளும் முக்கிய அம்சமாக கருதப்படுகின்றது.
இந்தநிலையில், நடைபெறப் போகும் தேர்தலை பயன்படுத்தி அமெரிக்காவும் (America) சீனாவும் (China) இலங்கையில் தனது ஆதிக்கத்தை செலுத்த கூடாது என்பதில் இந்தியா (India) உறுதியாக இருப்பதாக பிரித்தானியாவிலிருக்கும் (Britain) அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா (Vel Dharma) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பெருபான்மை இனத்தவர்களை தாண்டி தமிழ் மக்களுக்கு இந்தியா உதவும் என நினைப்பது மகவும் முட்டாள்தனம்.
அத்தோடு, தேர்தலை பயன்படுத்தி பெருபான்மை மக்களை தனக்கு சார்பான மக்களாக மாற்றலாம் என இந்திய கொள்கை வகுப்பாளர்கள் நம்பிக்கொண்டு இருக்கின்றனர்.
மேலும், நடைபெறபோகும் தேர்தலையடுத்து இந்தியாவின் இலங்கை மீதான பிடி முற்றாக இல்லாமல் போகும்” என அவர் தெரிவித்துள்ளார்.