D
செப்டம்பர் மாதம் முதல், குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறுவோரின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக திங்களன்று அறிவித்தார் கனடா பிரதமர்.
அத்துடன், கல்வி அனுமதிகளையும் குறைக்க திட்டமிட்டுள்ளது கனடா அரசு. மேலும், 70,000 மாணவர்கள் நாடுகடத்தப்படும் அபாயமும் உருவாகியுள்ளது.
ஆகவே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் முடிவை எதிர்த்து கனடா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளில் சர்வதேச மாணவர்கள் இறங்கியுள்ளார்கள்.
முன்னர் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் மட்டும் மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்த நிலையில், தற்போது, ஒன்ராறியோ, மனித்தோபா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா உட்பட பல மாகாணங்களில் பேரணிகள் துவங்கியுள்ளன.
வீட்டை அடமானம் வைத்து, கடனும் வாங்கி கனடாவுக்கு வந்து, கல்வி கற்று, பணி செய்து, வரிகளும் செலுத்தியும், இப்போது நாடுகடத்தப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளார்கள் புலம்பெயர்ந்தோர் பலர் என்பது குறிப்பிடத்தக்கது.